செய்திகள்

உலக தாய்மொழி தினம்: குழந்தைக்கு தாய்மொழி கற்பிக்க அமெரிக்க வேலையை உதறிய தம்பதி

Published On 2017-02-21 12:15 GMT   |   Update On 2017-02-21 12:15 GMT
உலகம் முழுவதும் உள்ள மக்களால் உலக தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தங்கள் குழந்தைக்கு தாய்மொழி கற்றுக் கொடுப்பதற்காக தங்கள் வேலையை உதறிவிட்டு இந்தியா வந்த தம்பதி குறித்து இங்கே பார்க்கலாம்.
ராஜ்கோட்:

கவுரவ் பண்டிட்-ஷீட்டல் தம்பதியர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தனர். இவர்களின் மகள் தாஷிக்கு ஒன்றரை வயதான போது இருவரும் ஒருசேர தங்கள் வேலையை உதறித்தள்ளி விட்டு குஜராத்தின் பாவ்நகருக்கு கடந்த 2015-ம் ஆண்டு வந்தனர்.

தங்களின் குழந்தை தாஷி தாய்மொழியான குஜராத்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இருவரும் இந்தியா திரும்பியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கவுரவ் கூறுகையில் ''தாஷிக்கு தற்போது மூன்றரை வயதாகிறது. அவள் நன்றாக குஜாரத்தி மொழி பேசுவதுடன், ரொட்டிகளையும் உண்கிறாள். கிர் காடுகள் உட்பட இங்குள்ள முக்கிய இடங்களுக்கு அவளை அழைத்துச்சென்று காண்பித்தோம்.

பாவ்நகர் அவளுக்கு நன்றாகவே பழகிவிட்டது. அருகில் உள்ள குழந்தைகளுடன் விளையாடும் தாஷி, இங்கு வேலை பார்க்கும் நபர்களுடனும் நன்றாகப் பேசுகிறாள்'' என்றார். தாஷி குஜராத்தி மொழியை நன்றாக பேச கற்றுக்கொண்ட நிலையில், தம்பதிகள் இருவரும் அமெரிக்கா சென்று மீண்டும் பணியாற்றத் தொடங்கியுள்ளனர்.

Similar News