செய்திகள்

பெங்களூருவில் போதைப்பொருள் விற்ற நைஜீரிய நாட்டு பெண் உள்பட 4 வாலிபர்கள் கைது

Published On 2017-02-19 05:21 GMT   |   Update On 2017-02-19 05:21 GMT
பெங்களூருவில் போதைப்பொருள் விற்ற நைஜீரிய நாட்டு பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

பெங்களூரு மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், பெங்களூரு, ராமமூர்த்திநகர் காவல் சரகத்துக்கு உள்பட்ட மாரகொண்டனஹள்ளி, பிதரஹள்ளியில் உள்ள ஓர் வீட்டில் அதிரடியாக சோதனையிட்டனர்.

இதில் போதைப் பொருள் விற்பனை செய்தது தொடர்பாக, நைஜீரிய நாட்டின் லாகோஸ் நகரை சேர்ந்த கிப்ட் பெனெடிக்ட் (26) என்ற இளம்பெண்ணும், மக்கூகோ சுக்வுக்கா மெவுலோக்வு (29), சுக்வுமேக்கா எஜுபியோ (31), விஸ்டம் அஹிபெஹிக்வு சுக்வுப்கோ (28) ஆகிய 3 வாலிபர்களும் போலீசாரிடம் சிக்கினார்கள்.

இவர்களிடம் இருந்து ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள 44 கிராம் கோகெய்ன், 10 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள், ஒரு மடிக்கணினி, ஒரு மின்னணு தராசு, தடைசெய்யப்பட்டுள்ள 500 ரூபாய் மதிப்புள்ள 5 நோட்டுகள், ஒரு லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் பிடிப்பட்ட இவர்கள் 4 பேர் மீது ராமமூர்த்தி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இவர்கள் 4 பேரும் வர்த்தகவிசா பெற்று இந்தியாவுக்கு வந்து, சட்ட விரோதமாக கோகெய்ன் போன்ற போதைப் பொருள்களை விற்பனை செய்து வந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Similar News