செய்திகள்

ஐ.பி.எஸ். அதிகாரி கே.விஜயகுமார் எழுதிய சந்தன கடத்தல் வீரப்பன் பற்றிய புத்தகம்

Published On 2017-01-27 19:28 GMT   |   Update On 2017-01-27 19:28 GMT
ஐ.பி.எஸ். அதிகாரியும் உள்துறை அமைச்சக மூத்த பாதுகாப்பு ஆலோசகருமான கே.விஜயகுமார், வீரப்பனுக்கு எதிரான வேட்டையில் தனது அனுபவங்களை புத்தகமாக எழுதியுள்ளார்.
புதுடெல்லி:

தமிழகம், கேரளா, கர்நாடக மாநில எல்லையை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் 20 ஆண்டுகளாக மறைந்திருந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த சந்தன கடத்தல் வீரப்பன் கடந்த 2004-ம் ஆண்டு தமிழக சிறப்பு அதிரடிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த படைக்கு தலைமை தாங்கியவரும், உள்துறை அமைச்சக மூத்த பாதுகாப்பு ஆலோசகருமான கே.விஜயகுமார், வீரப்பனுக்கு எதிரான வேட்டையில் தனது அனுபவங்களை புத்தகமாக எழுதியுள்ளார். ‘வீரப்பன்: சேசிங் தி பிரிகண்ட்’ என்று ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகத்தில் வீரப்பன் அரங்கேற்றிய கொலைகள், கடத்தல், குறிப்பாக கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி 108 நாட்கள் சிறை வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்று உள்ளன.

ரூபா பதிப்பகத்தின் வெளியீடான இந்த புத்தகத்தில், வீரப்பன் 1952-ம் ஆண்டு கோபிநத்தத்தில் பிறந்தது முதல் 2004-ல் கொல்லப்பட்டது வரையிலான முக்கியமான நிகழ்வுகள் அனைத்தும் சேர்க்கப்பட்டு உள்ளது. ஒரு சிறிய வேட்டைக்காரனாக வாழ்க்கையை தொடங்கிய வீரப்பன் 3 மாநிலங்களை எவ்வாறு ஆட்டிப்படைத்தார்? உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஐ.பி.எஸ். அதிகாரியான கே.விஜயகுமார் விவரித்துள்ளார். 

Similar News