செய்திகள்

குடியரசு தின சிறப்பு மணல் சிற்பம்: சுதர்சன் பட்நாயக் கலக்கல்

Published On 2017-01-26 04:49 GMT   |   Update On 2017-01-26 04:49 GMT
குடியரசு தினத்தை முன்னிட்டு மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், சிறப்பு மணல் சிற்பத்தை வடிவமைத்து மரியாதை நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி உள்ளார்.
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காக அம்மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் அவ்வப்போது மணல் சிற்பங்களை வடிவமைத்து வருகிறார். பத்மஸ்ரீ விருது பெற்ற அவர் சர்வதேச மணல் சிற்ப போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டம் தீவிரமாக நடைபெற்றபோது, சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் காளையின் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்து, கலாச்சாரத்தை மதிக்க வேண்டும் என தனது கருத்தினை பதிவு செய்திருந்தார். இந்த சிற்பம் அமோக வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், நாட்டின் 68-வது குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக, பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் அசத்தலான ஒரு மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.

மூவர்ண இதயத்தை கைகளில் தாங்கிப் பிடித்திருப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ள இந்த சிற்பத்தின் அடியில், குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவர், இந்தியாவை நேசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சிற்பத்தை புகைப்படம் எடுத்து தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

Similar News