செய்திகள்

மும்பை இளம்பெண்ணின் 24 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

Published On 2017-01-16 17:22 GMT   |   Update On 2017-01-16 17:22 GMT
மும்பை இளம்பெண்ணின் 24 வார கருவை கலைக்க அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி:

கருவில் இருக்கும் குழந்தை வளர்ச்சியின்மை அல்லது கருவால் தாயின் உயிருக்கு ஆபத்து போன்ற சூழல்கள் இருந்தால் மட்டுமே அந்த கருவை கலைக்க இந்திய அரசியல் சட்டம் அனுமதி அளிக்கிறது. அதுவும் 20 வாரம் வரையிலான வளர்ச்சி பெற்ற கருவையே கலைக்க முடியும்.

இந்த நிலையில் மும்பையை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவரின், 24 வாரகால கரு போதிய வளர்ச்சியற்ற நிலையில் காணப்பட்டது. குறிப்பாக குழந்தையின் மண்டை ஓடு இல்லாததால் அது பிறக்கும் போது தாய் மற்றும் சேயின் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என டாக்டர்கள் கூறினர். இதனால் இந்த கருவை கலைக்குமாறு அவர்கள் அறிவுறுத்தினர்.

எனவே அந்த கருவை கலைக்க அனுமதிக்குமாறு இளம்பெண் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கோர்ட்டு அறிவுறுத்தலின் பேரில் 7 உறுப்பினர்களை கொண்ட டாக்டர் குழுவினர் இளம்பெண்ணை பரிசோதித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த மனு மற்றும் டாக்டர்களின் அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோரை கொண்ட அமர்வு, இளம்பெண்ணின் கருவை கலைக்க அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தனர். 

Similar News