செய்திகள்

இந்தியா-ஜப்பான் உறவை மேம்படுத்துவதற்கான சிறந்த காலம் இது: சுரேஷ் பிரபு

Published On 2017-01-13 00:27 GMT   |   Update On 2017-01-13 00:27 GMT
முன் எப்போதும் இல்லாத அளவு இந்தியா ஜப்பான் நாடுகளிடையேயான உறவை மேம்படுத்துவதற்கான சிறந்த காலமாக தற்போது உள்ளது என்று மத்திய ரெயில்வே துறை மந்திரி சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

ஜப்பான்-இந்தியா உறவு தொடர்பாக தலைநகர் புதுடெல்லி நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ரெயில்வே துறை மந்திரி சுரேஷ் கலந்து கொண்டார். அப்போது இந்தியா ஜப்பான் இடையிலான கூட்டு பட திட்டத்தை சுரேஷ் பிரபு வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் சுரேஷ் பிரபு பேசியதாவது:-

இந்தியா ஜப்பான் இடையே நீண்ட காலமாக உறவு நீடித்து வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவு இருநாட்டு உறவை மேம்படுத்துவதற்கான சிறந்த காலமாக தற்போது உள்ளது.  

இருநாடுகளிடையே பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான உறவு மட்டுமல்லாமல் கலாச்சாரம் மற்றும் சமூக அளவில் நட்பு நீடித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவும் சீனாவும் முதல் புல்லட் ரெயில் திட்டம், புத்த பாரம்பரிய தளங்கள் தொடர்பான திட்டம் ஆகியவற்றில் இணைந்து செயல்பட்டு வருகிறது.

ஜப்பான் தேசிய சுற்றுலா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த ஆண்டு(2016) 1,23,000 இந்தியர்கள் ஜப்பான் சென்றுள்ளனர். 2015-ல் ஒரு லட்சம் பேர் சென்றுள்ளனர். அதேபோல் ஜப்பான் தரப்பில் கடந்த ஆண்டு2 லட்சம் பேர் இந்தியா வந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News