செய்திகள்

புவனேஷ்வரில் பறவை காய்ச்சல் தீவிரம்: பாதிக்கப்பட்ட கோழிகள் அழிப்பு

Published On 2016-12-29 00:12 GMT   |   Update On 2016-12-29 00:13 GMT
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பறவைகளை அழிக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளன.
புவனேஸ்வர்:

பறவைக் காய்ச்சல் என்பது பொதுவாக பறவைகளை தாக்கும் ஒரு குறிப்பிட்ட வைரஸ் ஆகும், சில அரிய வேளைகளில் பன்றியையும் தாக்கும். வீட்டில் வளர்க்கும் கோழி உள்ளிட்ட பறவை இனங்கள் இந்த வைரஸினால் தாக்கமுறும்போது இது மிக அபாயமான தொற்று நோயாக பரவும் வாய்ப்பு உள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் பறவை காய்ச்சல் நோய் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, பறவைக் காய்ச்சலுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஒடிசா அரசுக்கு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், பறவை காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத்துறை துறை மருந்து தெளிப்பது உள்ளிட்ட தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

மேலும், வேகமாக பறவி வரும் பறவைக் காய்ச்சலால், பாதிக்கப்பட்டுள்ள பறவைகளை அழிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

Similar News