செய்திகள்

நாடு முழுக்க அன்லிமிட்டெட் இலவச வாய்ஸ் கால் : வோடபோன் அறிவிப்பு

Published On 2016-12-09 14:00 GMT   |   Update On 2016-12-09 14:00 GMT
ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை எதிர்கொள்ள நாடு முழுக்க இலவச அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சலுகை திட்டங்களை வோடபோன் அறிவித்துள்ளது.
மும்பை:

ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவைகள் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் வோடபோன் நிறுவனமும் புதிய அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் சலுகைகளை அறிவித்துள்ளது. 

ஏர்டெல் மற்றும் ஐடியா போன்றே இரண்டு புதிய திட்டங்களை வோடபோன் அறிவித்துள்ளது. அதன் படி ரூ.144 ரீசார்ஜ் செய்யும் போது வோடபோன் நெட்வொர்க்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், இலவச ரோமிங் மற்றும் 50எம்பி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.344 ரீசார்ஜ் செய்யும் போது அனைத்து நெட்வொர்க்களுக்கும் இலவச அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், இலவச ரோமிங் மற்றும் 300 எம்பி இலவச 4ஜி டேட்டாவும், 4ஜி மொபைல் போன்களுக்கு 1GB டேட்டாவும் வழங்கப்படுகிறது. 

வோடபோன் அறிவித்திருக்கும் இரண்டு புதிய திட்டங்களையும் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி வாடிக்கையாளர்களும் பயன்படுத்த முடியும். இதற்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மற்ற நிறுவனங்களை போன்றே வோடபோன் நிறுவனமும் 200 மில்லியன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனமும் ரூ.149க்கும் குறைவான விலையில் புதிய திட்டங்களை வழங்குவது குறித்து ஆலோசனை செய்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து நெட்வொர்க் அழைப்புகளையும் இலவசமாக வழங்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி மொபைல் சேவைகளின் கீழ் இலவச வாய்ஸ் கால் மற்றும் டேட்டா போன்றவற்றை வழங்கி வருகிறது. தற்சமயம் வரை இந்தியா முழுக்க சுமார் 52 மில்லியன் பேர் ரிலையன்ஸ் ஜியோ சேவையினை பயன்படுத்தி வருகின்றனர். இந்த எண்ணிக்கை சேவை துவங்கி வெறும் 83 நாட்களில் எட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

Similar News