செய்திகள்

வோடபோன், ஏர்டெல் நிறுவனங்களைத் தொடர்ந்து ஐடியாவும் புதிய சலுகைகள் அறிவிப்பு

Published On 2016-12-09 09:19 GMT   |   Update On 2016-12-09 09:19 GMT
இந்திய பயனர்களுக்கு ஐடியா செல்லுலார் நிறுவனம் புதிய வாய்ஸ் மற்றும் டேட்டா திட்டங்களை அறிவித்துள்ளது.
புதுடெல்லி: 

ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை எதிர்கொள்ள வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் புதிய டேட்டா திட்டங்களை அறிவித்தன. இந்நிலையில் ஐடியா செல்லுலார் நிறுவனமும் புதிய வாய்ஸ் மற்றும் டேட்டா திட்டங்களை அறிவித்துள்ளது.

ஐடியா நிறுவனத்தின் புதிய அன்லிமிட்டெட் வாய்ஸ் சேவைகள் ரூ.148 மற்றும் ரூ.348 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இரண்டு திட்டங்களிலும் டேட்டா சலுகைகளும் வழங்கப்படுகின்றன. ரூ.348 ரீசார்ஜ் செய்யும் போது அனைத்து நெட்வொர்க் எண்களுக்கும் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் 1GB அளவு 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. 

ரூ.148 ரீசார்ஜ் செய்யும் போது ஐடியா எண்களுக்கு மட்டும் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் 300எம்பி அளவு 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. ஐடியாவின் இரண்டு திட்டங்களுக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. 4ஜி ஸ்மார்ட்போன் இல்லாத பயனர்களுக்கு 50எம்பி டேட்டா வழங்கப்படுகிறது. 

ஐடியா நிறுவனம் அறிவித்திருக்கும் புதிய வாய்ஸ் காலிங் திட்டங்களும், போட்டி நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஏர்செல் போன்றே சம அளவு வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ போட்டியை எதிர்கொள்ள வோடபோன் தன் சேவை கட்டணங்களை பாதியாக குறைத்தது குறிப்பிடத்தக்கது.

Similar News