செய்திகள்

தீவிரவாதிகள் அச்சுறுத்தல்: திருப்பதியில் போலீசார் அதிரடி சோதனை

Published On 2016-12-07 05:52 GMT   |   Update On 2016-12-07 05:52 GMT
திருமலையில் தீவிரவாதிகள் அச்சுறுத்தலையொட்டி தீவிர சோதனை நடத்துமாறும், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.
திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்திப் பெற்றதாகும். கோவிலுக்கு தினமும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். ஏழுமலையான் கோவிலுக்குப் பயங்கரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாக, திருப்பதி தேவஸ்தானத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் அனுப்பியது. எனவே திருமலையில் தீவிர சோதனை நடத்துமாறும், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியது.

அதன்படி புலனாய்வுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாரெட்டி, திருமலை துணை போலீஸ் சூப்பிரண்டு முனிராமய்யா, ஆக்டோபஸ் படை துணை போலீஸ் சூப்பிரண்டு ரமணா, திருமலை-திருப்பதி தேவஸ்தான பறக்கும்படை அதிகாரி ரவீந்திராரெட்டி மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் நேற்று திருப்பதியில் நான்கு மாடவீதிகள், வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், மத்திய வரவேற்பு மையம், அமைனிட்டி காம்ப்ளக்ஸ், அலிபிரி நடைபாதை உள்பட பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

Similar News