செய்திகள்

அம்பேத்கருக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது பா.ஜ.க. : மாயாவதி

Published On 2016-12-06 19:46 GMT   |   Update On 2016-12-06 19:46 GMT
அம்பேத்கருக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கு பாரதீய ஜனதா கட்சி எதிரானது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
லக்னோ:

சட்டமேதை டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கரின் 61-வது நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. நாடு முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோ நகரில் உள்ள அம்பேத்கர் பூங்காவில் உள்ள சிலைக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கு மாயாவதி உரையாற்றியதாவது:-

தலித்துகளுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இடையே அரசியல் கட்சிகள் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் பகுஜன் சமாஜ் ஆட்சியின் கீழ் சமுதாயத்தின் இந்த இரு பிரிவினரும் தங்களது உரிமைகளை உண்மையில் பெற்றனர்.

அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டமானது அனைத்து சாதி மற்றும் மதத்தினருக்கு சமமான மதிப்பளிக்கிறது. ஆனால் பா.ஜ.க. இந்துத்துவா கொள்கைகளை நாட்டில் நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது.

அம்பேத்கருக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் பாரதீய ஜனதா கட்சி எதிரானது

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News