செய்திகள்

ஜெயலலிதா உடல் நிலை: பிரதமர் மோடியிடம் மத்திய மந்திரி விளக்கம்

Published On 2016-12-05 07:41 GMT   |   Update On 2016-12-05 09:52 GMT
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி பிரதமர் நரேந்திர மோடியிடம் மத்திய மந்திரி ஜே.பி.நட்டா விளக்கம் அளித்தார்.
புதுடெல்லி:

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனால் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழக அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி. நட்டா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் டெல்லியில் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணம் அடைய பிரார்த்தனை செய்கிறேன். இந்த வி‌ஷயத்தில் தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது.

முதல்-அமைச்சரின் உடல் நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை, தமிழக அரசிடம் தொடர்ந்து கேட்டு அறிந்து வருகிறோம். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் எய்ம்ஸ் மருத்துவர்கள் உதவி தேவைப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து எய்ம்ஸ் டாக்டர்கள் 4 பேர் சென்னை அனுப்பப்பட்டுள்ளனர். ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி பிரதமர் நரேந்திர மோடியிடம் மத்திய மந்திரி ஜே.பி.நட்டா விளக்கம் அளித்தார்.

Similar News