செய்திகள்

பஞ்சாபில் ஊடுருவிய தீவிரவாதி சுட்டுக்கொலை: துப்பாக்கி சண்டையில் காஷ்மீர் இளைஞர்பலி

Published On 2016-12-03 09:29 GMT   |   Update On 2016-12-03 09:29 GMT
பஞ்சாபில் ஊடுருவிய தீவிரவாதி சுட்டுக்கொலை துப்பாக்கி சண்டையில் காஷ்மீர் இளைஞர்பலி

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் தினமும் தீவிரவாதிகள் ஊடுருவல், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் ஆகியவை நடந்து வருகிறது. இதை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகிறார்கள்.

இன்று அதிகாலையில் காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் எல்லை பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் குண்டு பாய்ந்து பலியானார்.

பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தாக்கியதில் 2 தீவிரவாதிகள் பிடிபட்டனர்.

இதேபோல் பஞ்சாப் மாநிலம் பதன்கோட் பகுதியிலும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவலில் ஈடுபட்டனர்.

பஞ்சாபில் அமிர்தசரஸ் நகரில் இன்றும் நாளையும் மத்திய ஆசிய நாட்டு தலைவர்கள் மாநாடு நடக்கிறது. இதையொட்டி மாநில எல்லையில் பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டனர்.

அப்போது பதன்கோட் அருகே திண்டா என்ற இடத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலில் ஈடுபட முயன்றனர். உடனே எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு தீவிரவாதி பலியானான். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Similar News