செய்திகள்

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்: வோடபோன் சிறப்பு காலர் டியூன்கள் அறிமுகம்

Published On 2016-12-02 14:58 GMT   |   Update On 2016-12-02 14:58 GMT
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை சிறப்பிக்கும் நோக்கில் வோடபோன் நிறுவனம், பிரத்யேக காலர் டியூன்களை அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பேச்சு மற்றும் காது கேட்பதில் குறைபாடு உள்ளவர்களுக்கென பிரத்யேக காலர் டியூன்களை வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. இவற்றை பயனர்கள் வாழ்நாள் முழுக்க இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் உலகெங்கும் நாளை (டிசம்பர் 3) அனுசரிக்கப்பட இருக்கிறது. வாடிக்கையாளர்கள் புதிய வோடபோன் சேவையைப் பெற டவுன்லோட் செய்து ஆக்டிவேட் செய்து இரண்டு சிறப்பு காலர் டியூன்களை தேர்வு செய்ய வேண்டும். இதன்பின் சேவையை ஆக்டிவேட் செய்தவர்களை யாராவது அழைத்தால், எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலம் குறுந்தகவல் அனுப்பும்படி காலர் டியூன் ஒலிக்கும்.

மாற்றுத்திறனாளிகள் இத்தகைய வோடபோன் சிறப்பு காலர் டியூன்களை பெற "CT 8894702" என டைப் செய்து 56789 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும், இதில் ஆங்கிலம் - இந்தி - ஆங்கிலம் மொழியில் ஒலிக்கும், "CT 8894716" என டைப் செய்து 56789 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பும் போது இந்தி - ஆங்கிலம் - இந்தி மொழிகளில் காலர் டியூன் ஒலிக்கும்.

Similar News