செய்திகள்

கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவோர் தப்பமுடியாது: பொருளாதார துறை செயலாளர் எச்சரிக்கை

Published On 2016-12-02 08:28 GMT   |   Update On 2016-12-02 08:28 GMT
கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவோர் தப்ப முடியாது என்று பொருளாதாரத்துறை செயலாளர் சக்தி காந்ததாஸ் இன்று டுவிட்டர் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி:

கருப்பு பணத்தையும் கள்ள நோட்டுக்களையும் ஒழிக்க மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என அறிவித்துள்ளது. கருப்பு பணம் வைத்திருப்போர் ஏழைகளின் வங்கி கணக்குகள் மூலம் அதை வெள்ளைப்பணமாக மாற்ற முயற்சி செய்து வருகிறார்கள்.

இது தொடர்பாக மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்ததாஸ் இன்று டுவிட்டர் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார் அதில் கூறியிருப்பதாவது:-

கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவோரை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கருப்பு பணத்தை மாற்றுவோரும், அதற்கு உடந்தையாக இருப்பவர்களும் இதில் இருந்து தப்ப முடியாது.

இது தொடர்பாக வருமான வரி மற்றும் அமலாக்கப் பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் சோதனைகள் நடத்தி வருகின்றன. தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இனி வரும் நாட்களில் இந்த சோதனை மேலும் தீவிரப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News