செய்திகள்

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு ரூ.2000 கோடி நிதி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published On 2016-11-30 14:25 GMT   |   Update On 2016-11-30 14:25 GMT
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு வந்த குடும்பங்களுக்கு 2000 கோடி ரூபாய் ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலா, வணிக விசா நடைமுறைகளை எளிதாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், அசாம், பீகார், இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மேலும் சில சமுதாயத்தை சேர்க்க வகை செய்யும் சட்டத்திருத்தத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்த 36384 குடும்பங்களுக்கு 2000 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிதியில் இருந்து, இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு தலா ரூ.5.5. லட்சம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதவிர, நஷ்டத்தில் இயங்கி வரும் இன்ஸ்ட்ரூமென்டேசன் லிமிடெட் கோட்டா அலகினை மூடவும், பாலக்காடு அலகினை கேரள அரசாங்கத்திடம் ஒப்படைக்கவும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Similar News