செய்திகள்

ராஜஸ்தான்: உழவர் சந்தையை களைகட்ட வைத்த காளை மாடு

Published On 2016-11-11 09:24 GMT   |   Update On 2016-11-11 09:25 GMT
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுவரும் உழவர் சந்தையை களைகட்ட வைத்த காளை மாட்டின் உரிமையாளர் 9.25 கோடி ரூபாய்க்கு விலைபேசப்பட்ட தனது யுவராஜை யாருக்கும் விற்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுவரும் உழவர் சந்தையை களைகட்ட வைத்த காளை மாட்டின் உரிமையாளர் 9.25 கோடி ரூபாய்க்கு விலைபேசப்பட்ட தனது யுவராஜை யாருக்கும் விற்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

சுமார் 14 அடி நீளம். 5.9 அங்குலம் உயரமுள்ள இந்த கருப்புநிற காளை மாட்டை அன்றாடம் 20 லிட்டர் பால் மற்றும் 15 கிலோ பழவகைகள் உள்ளிட்ட உயர்வகை உணவுகளை அளித்து இதன் உரிமையாளரான கரம்வீர் சிங் பராமரித்து வருகிறார்.

யுவராஜ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த 8 வயது காளை இதுவரை பல்வேறு போட்டிகளில் பங்கேற்று உரிமையாளருக்கு கவுரவத்தை தேடித் தந்துள்ளது. யுவராஜை 9.25 கோடி ரூபாய் வரை சிலர் விலைக்கு கேட்டதாகவும், ஆனால், விற்பனை செய்ய மறுத்துவிட்டதாகவும் கூறும் கரம்வீர் சிங்கின் பேட்டியைக்காண..,

Similar News