செய்திகள்

சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு: விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்டு

Published On 2016-11-04 07:55 GMT   |   Update On 2016-11-04 09:06 GMT
சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி:

பெங்களூரை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா. தனது கிங்பி‌ஷர் நிறுவனத்துக்கு வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டார். அவர் ரூ.9,000 கோடி வரை வங்கிகளுக்கு செலுத்த வேண்டி உள்ளது.

இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் விஜய் மல்லையா லண்டனுக்கு விமானத்தில் தப்பிச் சென்றுவிட்டார். அவர் மீது சி.பி.ஐ. மோசடி வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அமலாக்கப்பிரிவு சார்பில் சட்ட விரோத பண பரிவர்த்தனை பிரிவின் கீழ் தனியாக வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் அமலாக்கப்பிரிவு முன் ஆஜராகுமாறு விஜய் மல்லையாவுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

இதையடுத்து விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வரமுடியாத பிரிவுகளில் பிடிவாரண்டு பிறப்பித்து டெல்லி ஐகோர்ட்டு இன்று உத்தரவு பிறப்பித்தது.

லண்டனில் இருக்கும் விஜய் மல்லையா நாடு திரும்ப விரும்புகிறார். ஆனால் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. அவரை இந்தியாவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் இங்குள்ள சட்டம் போதுமானதாக இல்லை என்று கோர்ட்டு கருத்து தெரிவிக்கிறது.

செக் மோசடி வழக்கில் ஏற்கனவே, கடந்த 2012-ம் ஆண்டு விஜய் மல்லையாவுக்கு எதிராக கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News