செய்திகள்

மதுக்கடைகளில் துணை முதல் மந்திரி அதிரடி சோதனை - லைசென்ஸ் ரத்து

Published On 2016-10-25 05:17 GMT   |   Update On 2016-10-25 05:17 GMT
டெல்லியில் உள்ள மதுக்கடைகளில் துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா அதிரடி சோதனை நடத்தி ஒரே உரிமத்தில் இரண்டு கடைகளை நடத்தி வந்தவருக்கு அளிக்கப்பட்ட லைசென்ஸை ரத்துசெய்து உத்தரவிட்டார்.
புதுடெல்லி:

டெல்லி முதல் மந்திரி மணிஷ் சிசோடியா நேற்று மாலை கலால்துறை அதிகாரிகளுடன் மயூர் விஹார் பகுதிகளில் உள்ள நான்கு மதுக்கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினார்.

இப்பகுதியில் உள்ள மதுக்கடைகளால் பொதுமக்கள் மார்கெட்டுக்கு வருவதில் சிரமம் ஏற்படுவதாக வந்த புகார்களையடுத்து இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

இந்த சோதனையில் விதிமுறைகளை மீறிய வகையில் வியாபாரம் செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளுக்கான அனுமதி தொடர்பான விதிமுறைகளின்படி கடையின் மொத்த பரப்பளவில் 15 சதவீதம் இடத்தில் மட்டுமே மதுபான பாட்டில்களை வைத்துக்கொள்ள முடியும். ஆனால், சுமார் 90 சதவீதம் அளவிலான இடத்தில் மது பாட்டில்களை அடுக்கி வைத்திருந்த ஒருகடையின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரே உரிமத்தை பெற்று இரண்டு கடைகளை நடத்தி வந்தவருக்கு அளிக்கப்பட்ட லைசென்ஸை ரத்துசெய்தும் மணிஷ் சிசோடியா உத்தரவிட்டார்.

Similar News