செய்திகள்

தலைநகரில் தொடரும் அவலம்: சிக்குன்குனியா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது

Published On 2016-10-24 14:00 GMT   |   Update On 2016-10-24 14:00 GMT
தலைநகர் டெல்லியில் சிக்குன்குனியா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10000 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவி வகித்து வரும் டெல்லியில் சிக்குன்குனியா நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகி வருகிறது.

இது தொடர்பாக டெல்லி மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் "டெல்லியில் 10,210 பேர் சிக்குன்குனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நோயால் 3,333 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.

சிக்குன்குனியாவுக்கு சரிசமமாக டெங்கு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் சுமார் 1,200 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 21-ஐத் தாண்டியுள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டு டெல்லியில் டெங்கு நோயால் 10,252 பேர் பாதிக்கப்பட்டு அதில் 423 பேர் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News