செய்திகள்

அகிலேஷ் யாதவ் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்: பா.ஜ.க. வலியுறுத்தல்

Published On 2016-10-23 12:16 GMT   |   Update On 2016-10-23 12:16 GMT
முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் சட்டசபையில் தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. மாநில அமைச்சரவையில் முலாயம் சிங்கின் சகோதரர் சிவபால் முக்கிய அங்கம் வகித்து வருகிறார்.

உத்தரப்பிரதேசம் சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அகிலேஷ் யாதவுக்கும் அவரது சித்தப்பாவான சிவபாலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, உ.பி. மாநிலத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் இன்று முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையில் லக்னோ நகரில் நடைபெற்றது.

இந்த கூட்டம் முடிந்ததும் வெளியேவந்த மாநில விளையாட்டுத்துறை மந்திரி ராம்கரன் ஆர்யா, மாநில மந்திரிசபையில் இருந்து அகிலேஷ் யாதவின் மாமா சிவபால் யாதவ், நரட் ராய், ஷதாப் பாத்திமா மற்றும் ஓம் பிரகாஷ் சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் சட்டசபையில் தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் அல்லது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அம்மாநில பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து உத்திரபிரதேசம் மாநில பா.ஜ.க. தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா கூறுகையில், “சமாஜ்வாடி கட்சி தற்போது மூழ்கும் கப்பலாக உள்ளது. மைனாரிட்டி அரசாக ஆன பின்பு கொள்கை முடிவுகளை எடுக்க கூடாது” என்றார்.

Similar News