செய்திகள்

காட்டு பறவை நோய் தாக்கி பலி: ராஜஸ்தானில் பறவை காய்ச்சல் பீதி

Published On 2016-10-23 12:13 GMT   |   Update On 2016-10-23 12:13 GMT
டெல்லியில் காட்டு பறவை ஒன்று நோய் தாக்கி இறந்து கிடந்ததையடுத்து, ராஜஸ்தானில் பறவை காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.
ஜெய்பூர்:

வடமாநிலங்களில் தற்போது பறவைகள் இடம் பெயர்வு சீசன் ஆகும். ராஜஸ்தான், உத்தரபிரதேசம், அரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் பறவைகள் இடம் பெயர்ந்து வருகின்றன.

இப்படி இடம் பெயர்ந்து வந்த காட்டு பறவை ஒன்று டெல்லியில் இறந்து கிடந்தது. அதை கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அந்த பறவைக்கு பறவை காய்ச்சல் நோய் தாக்கி இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து டெல்லியில் இருந்து ராஜஸ்தான், உத்தர பிரதேசம், அரியானா மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காட்டு பறவைகளை பறவை காய்ச்சல் தாக்கி இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி கூறப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் உள்ள பரத்பூர், ஜோத்பூர், ஜெய்சல்மார், பிகேனர் ஆகிய மாவட்டங்களுக்கு தற்போது மற்ற மாநிலங்களில் இருந்து பறவைகள் இடம் பெயர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன.

அந்த பறவைகளால் பறவை காய்ச்சல் பரவி விட கூடாது என்பதற்காக ராஜஸ்தானில் உள்ள பறவை சரணாலயங்கள் அனைத்திலும் மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.

இத்துடன் கோழி பண்ணைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஜெய்பூரில் உள்ள மிருககாட்சி சாலைகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

Similar News