செய்திகள்

இந்தியாவின் மிக பழமையான விமானம்தாங்கி கப்பலுக்கு பிரியாவிடை

Published On 2016-10-23 10:35 GMT   |   Update On 2016-10-23 10:35 GMT
இந்திய கடற்படையில் சுமார் அரை நூற்றாண்டு காலம் சேவைபுரிந்த மிகவும் பழமையான விமானம்தாங்கி போர்க் கப்பலான ’ஐ.என்.எஸ். விராட்’ க்கு கொச்சி கடற்படை தளத்தில் இருந்து பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
திருவனந்தபுரம்:

இந்திய கடற்படையில் 55 ஆண்டுகள் சேவைபுரிந்த நாட்டின் மிகவும் பழமையான விமானம்தாங்கி போர்க் கப்பலான ’ஐ.என்.எஸ். விராட்’ க்கு ஓய்வு அளிக்க கடற்படை அதிகாரிகள் தீர்மானித்தனர்.

ஓய்வுக்கு பின்னர் இந்தக் கப்பலை வாங்கி, விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்திவைத்து சுற்றுலா பயணிகளை ஈர்க்க ஆந்திர மாநில அரசு விருப்பம் தெரிவித்தது. இதை கடற்படை நிர்வாகமும் ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி துறைமுகத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ’ஐ.என்.எஸ். விராட்’ இன்று மும்பை துறைமுகத்தை நோக்கி தனது இறுதிப் பயணத்தை தொடங்கியது. மூன்று இழுவை கப்பல்கள் அதை இழுத்துச் சென்றபோது, இந்திய கடற்படையின் தென்னக கடற்படை கமாண்டர் ’ரியர் அட்மிரல், நட்கர்னி உள்ளிட்ட உயரதிகாரிகள் பிரியாவிடை தந்து, வழியனுப்பி வைத்தனர்.

Similar News