செய்திகள்

ஒடிசா மருத்துவமனை தீ விபத்தில் பலி 25 ஆக உயர்வு: சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா

Published On 2016-10-21 15:18 GMT   |   Update On 2016-10-21 15:18 GMT
ஒடிசா மாநிலத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழப்பு 25 ஆக உயர்ந்துள்ள நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 21 நோயாளிகள் பலியான நிலையில், தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தீவிபத்து தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணைக்கு முதல்-மந்திரி நவீன்பட்நாயக் உத்தர விட்டார். மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா புவனேஸ்வர் வந்து தீ விபத்து நடந்த மருத்துவமனையை பார்வையிட்டார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து மருத்துவமனை நிர்வாகிகள், பொறுப்பாளர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஒடிசா சுகாதாரத்துறை மந்திரி ராஜினாமா அதானு சப்யாசச்சி நாயக் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.

‘மருத்துவமனை தீ விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் அதானு சப்யாசச்சி நாயக் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். கடிதத்தை கவர்னருக்கு அனுப்பியிருக்கிறேன்’ என முதல்வர் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

Similar News