செய்திகள்

உதய் மின் திட்டத்தில் தமிழகம் இணைகிறது: மத்திய மந்திரி பியூஷ் கோயல் தகவல்

Published On 2016-10-21 13:01 GMT   |   Update On 2016-10-21 13:00 GMT
உதய் மின் திட்டத்தில் சேர தமிழக அரசு முன்வந்திருப்பதாக மத்திய மின்சாரத்துறை மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.
புதுடெல்லி:

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி இன்று டெல்லியில் மத்திய மின்துறை மந்திரி பியூஷ் கோயலை சந்தித்து பேசினார். அப்போது, மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் தமிழகம் சேருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி பியூஷ் கோயல், உதய் மின் திட்டத்தில் சேர தமிழக அரசு முன்வந்திருப்பதாக தெரிவித்தார்.

உதய் திட்டத்தில் சேருவதற்கு தமிழகம் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறிய அவர், இத்திட்டத்தில் இணைந்து பேசி ஒரு நியாயமான தீர்மானத்துக்கு வந்திருப்பதாகவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தமிழகம் சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடையவும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் தமிழகம் வந்த பியூஷ் கோயல், முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து உதய் திட்டம் தொடர்பாக பேசியது குறிப்பிடத்தக்கது.

Similar News