செய்திகள்

விவாகரத்தில் இந்தியாவின் முதன்மை மாநிலமான மகாராஷ்டிரா

Published On 2016-10-21 09:23 GMT   |   Update On 2016-10-21 09:23 GMT
இந்தியர்களின் திருமண நிலை, விவாகரத்து குறித்த கணக்கெடுப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் உள்ள சில சுவாரசியமான விஷயங்களை இங்கே பார்ப்போம்.
மும்பை:

இந்தியாவில் ஆண்களை விட பெண்களே விவாகரத்தில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்து மதத்தில் 68% பேரும், முஸ்லீம் மதத்தில் 23.3% பேரும் விவாகரத்து செய்து கொள்கின்றனர். முஸ்லீம் மதத்தில் விவாகரத்து செய்வோரில் 80% பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நகரவாசிகளை விட கிராமப்புற மக்களே விவகாரத்து செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனராம். உதாரணமாக நகரவாசிகளில் 5.03 லட்சம் பேர் விவாகரத்து செய்தால் கிராமப்புறங்களில் 8.5 லட்சம் விவகாரத்து செய்கின்றனராம்.

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் தான் விவாகரத்து பெற்றவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். கிட்டத்தட்ட இந்த மாநிலத்தில் சுமார் 2.09 லட்சம் விவாகரத்து பெற்றவர்கள் வசித்து வருகின்றனர். இந்த 2.09 லட்சம் பேரில் 1.5 லட்சம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் அதிகம் விவாகரத்து பெற்ற ஆண்கள் வசித்து வரும் மாநிலம் என்ற பெருமை குஜராத்திற்கு கிடைத்துள்ளது. இங்கு சுமார் 1.03 லட்சம் விவாகரத்து பெற்ற ஆண்கள் வசித்து வருவதாகவும், இது அந்த மாநிலத்தில் விவாகரத்து செய்தவர்களில் 54% என்றும் இந்த கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் குறைந்த விவாகரத்துகள் நடைபெறும் மாநிலம் என்ற பெருமையை கோவா பெற்றுள்ளது. இங்கு விவாகரத்து செய்து கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1330 என்றளவில் உள்ளது.

Similar News