செய்திகள்

32 லட்சம் ஏ.டி.எம். கார்டு தகவல்கள் திருட்டு: பின் எண்ணை மாற்றும்படி வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அறிவுரை

Published On 2016-10-20 13:08 GMT   |   Update On 2016-10-20 13:08 GMT
இந்தியாவில் உள்ள 32 லட்சம் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டு தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நமது தினசரிப் பயன்பாடுகளில் ஒன்றாகி விட்ட ஏ.டி.எம். கார்டுகளின் தகவல்களை பிறரிடம் இருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. பின் எனப்படும் பாதுகாப்பு எண்ணையும் யாருக்கும் தெரிவிக்கக்கூடாது.

சில சமயங்களில் நமது பாதுகாப்பையும் மீறி தகவல்கள் திருடு போய்விட்டால்? உண்மையில் அதுதான் தற்போது நடந்துள்ளது. இந்தியாவில் உள்ள 32 லட்சம் வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு தகவல்கள் திருடு போய்விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் அதிகமாக எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெச்.டி.எப்.சி, எஸ் பேங்க் மற்றும் ஆக்சிஸ் வங்கிக வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டு தகவல்கள் திருடு போயுள்ளன.

ஏடிஎம் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான ஹிடாச்சியின் கம்ப்யூட்டர்களில் தான் முதலில் இந்த தகவல் திருட்டு மால்வேர் பரவியதாகவும், திருடப்பட்ட டெபிட் கார்டுகள் சீனாவில் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இதையடுத்து தகவல் திருடப்பட்டிருக்கும் ஏடிஎம் கார்டுகளை முடக்கும் நடவடிக்கையை வங்கிகள் மேற்கொண்டுள்ளன. உடனடியாக பின் எண்ணை மாற்றும்படி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகின்றன.

ஸ்டேட் வங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6.25 ஏடிஎம் கார்டுகளை முடக்கியுள்ளது. இதற்கு பதிலாக புதிய ஏடிஎம் கார்டுகளை வழங்க உள்ளதாக கூறியுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் பின் எண்ணை மாற்றுதல் உள்ளிட்ட சில அறிவுரைகளையும் கூறியுள்ளது.

Similar News