செய்திகள்

கூகுள் தேடல் மூலமாக ஓலா, உபேர் புக் செய்யும் வசதி அறிமுகம்

Published On 2016-10-20 08:02 GMT   |   Update On 2016-10-20 08:02 GMT
கூகுள் தேடல் மூலமாக ஓலா, உபேர் போன்ற கால் டாக்சிகளை புக் செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மும்பை:

மிகக்குறைந்த கட்டணத்தில் அறிமுகமான ஓலா, உபேர் போன்ற கால் டாக்சி நிறுவனங்கள் இன்று நடுத்தர மக்கள், இளைஞர்கள், ஐடி ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரையும் கவர்ந்துள்ளன.

மற்ற கால் டாக்சிகளைப் போல இல்லாமல் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் கூகுளில் இருந்து பிரத்தியேக செயலிகளைத் தரவிறக்கம் செய்து அதனை ஸ்மார்ட் போன்கள் மூலம் பயன்படுத்தும் சூழ்நிலை இதுநாள்வரை இருந்தது.

இந்நிலையில் கூகுள் தேடல் மூலமாக ஓலா, உபேர் கால் டாக்சிகளை இனி புக் செய்ய முடியும் என கூகுள் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் திட்ட மேலாளர் சங்கேத் குப்தா கூறுகையில் "இதன் மூலம் இரண்டு கால் டாக்சி நிறுவனங்களுக்கான கட்டணங்களை தங்கள் மொபைல் மூலமாக பயனாளிகள் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். மேலும் இந்த வசதி மூலம் விரைவாக முன்பதிவு செய்து கொள்ள முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

கூகுள் தேடலில் ஒரே கிளிக்கின் மூலமாக கால் டாக்சியை புக் செய்ய முடியும். உதாரணமாக நமது இருப்பிடத்திலிருந்து ஓலா சென்னை விமானநிலையம் அல்லது உபேர் சென்னை விமானநிலையம் என கூகுள் தேடலில் குறிப்பிட்டால் ஒரே கிளிக்கின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட செயலிக்கு சென்று மேற்கண்ட கால் டாக்சியை புக் செய்ய முடியும்.

Similar News