செய்திகள்

ஹங்கேரி, அல்ஜீரியா நாடுகளில் 5 நாள் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் அன்சாரி

Published On 2016-10-20 00:05 GMT   |   Update On 2016-10-20 00:05 GMT
துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி ஹங்கேரி மற்றும் அல்ஜீரியா நாடுகளில் 5 நாள் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினார்.
புதுடெல்லி:

துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி ஹங்கேரி மற்றும் அல்ஜீரியா நாடுகளில் 5 நாள் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

முன்னதாக ஹங்கேரி நாட்டில் மூன்று நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு இரண்டு நாள் பயணமாக ஹமீது அன்சாரி நேற்று முன் தினம் அல்ஜீரியா நாட்டிற்கு சென்றார்.

அல்ஜீரியா நாட்டில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட அன்சாரி அந்நாட்டு அதிபர் அப்தெலாஜிஸ் போட்டிபிளிகா, பிரதமர் அப்தெல் மலெக் ஷெலல் மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலை ஒழித்தலின் அவசியம் குறித்தும், அதற்காக சர்வதேச அளவில் கூட்டு முயற்சி தேவை என்பதிலும் இரு நாடுகளின் தலைவர்களும் ஒத்த கருத்து நிலையை எட்டினர்.

முன்னதாக ஹங்கேரியில் அன்சாரி மேற்கொண்ட மூன்று நாள் பயணத்தின் போது நீர் மேலாண்மை உள்ளிட்ட இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

Similar News