செய்திகள்

பசிபட்டினியால் வாடுபவர்கள் அதிகம் உள்ளோர் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 97வது இடம்

Published On 2016-10-13 19:49 GMT   |   Update On 2016-10-13 19:49 GMT
சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எப்.பி.ஆர்.ஐ.,) சார்பில் உலகளாவிய பட்டினிப் பட்டியல் (ஜி.எச்.ஐ.,) ஆய்வு நடத்தப்பட்டது. இதில் இந்தியா மிகவும் 97வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எப்.பி.ஆர்.ஐ.,) சார்பில், உலகளாவிய பட்டினிப் பட்டியல் (ஜி.எச்.ஐ.,) ஆய்வு நடத்தப்பட்டது. சுமார் 131 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தற்போது 118 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

இதில் இந்தியா மிகவும்  97வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் நைஜீரியா, எத்தியோப்பியா, சியாரா லீயோன் உள்ளிட்ட நாடுகள் மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்தியாவைவிட பட்டினியில் வாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் இந்தியாவைவிட பின் தங்கியுள்ள நாடுகளான இலங்கை, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் குறைந்த அளவே மக்கள் பட்டினியில் வாடுவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இப்பட்டியலில் இந்தியா கடந்த 2000ல் 83வது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது 97வது இடம்பிடித்துள்ளது. இதேபோல வங்கதேசம் இப்பட்டியலில், 2000ம் ஆண்டு 84வது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவை விட 7 இடங்கள் முன்னேறி 90வது இடத்தில் உள்ளது. 

Similar News