செய்திகள்

உரி பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் வம்சாவளி நடிகை சல்மா கண்டனம்

Published On 2016-10-07 00:32 GMT   |   Update On 2016-10-07 00:32 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட உரி பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் வம்சாவளி நடிகை சல்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் நுழைந்து இந்திய ராணுவத்தினர் பயங்கரவாதிகள் முகாம்கள் பலவற்றை அழித்து ஒழித்தனர்.

இதனை தொடர்ந்து இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வந்தது. இதனிடையே பாகிஸ்தான் நாட்டு கலைஞர்கள் இந்தியாவில் பணி புரிய கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு பல்வேறு கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரபல இயக்குநார் ஷியாம் பெனகல் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட உரி பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் வம்சாவளி நடிகை சல்மா கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஒரு வருத்தம் அளிக்கக் கூடிய சம்பவம் என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தானில் பிறந்தவரும் இந்தியாவின் பாடகருமான ஆதன் சமி உரி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, சர்ஜிகல் தாக்குதலுக்கும் பாராட்டுக்களை கூறினார்.

Similar News