செய்திகள்

தொழிற்சாலைகளுக்கான இயற்கை எரிவாயு விலை 2.5 அமெரிக்க டாலர் குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு

Published On 2016-09-30 12:55 GMT   |   Update On 2016-09-30 12:55 GMT
தொழிற்சாலைகளுக்கான இயற்கை எரிவாயு விலையை 18 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

சர்வதேச சந்தையை ஒட்டி இயற்கை எரிவாயுவின் விலை, ஒவ்வொரு 6 மாதத்துக்கும் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்தது.  

அதன்படி தொழிற்சாலைகளுக்கான இயற்கை எரிவாயு விலையை 18 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை (அக்டோபர் 1-ஆம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அக்டோபர் 1-ம் தேதி முதல் மார்ச் வரை தொழிற்சாலைகளுக்கான இயற்கை எரிவாயு விலை ஒரு மில்லியன் பிரிட்டீஸ் தெர்மல் யூனிட்டிற்கு 2.5 அமெரிக்க டாலர்(இந்திய மதிப்பில் ரூ.166.59) ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் மார்ச் 31 வரை 3.81 டாலராகவும், பின்னர் கடந்த 6 மாதத்தில் 4.66 டாலராகவும் இருந்தது.

மின் உற்பத்தி, உரம் தயாரிப்பு உள்ளிட்ட தொழிற்சாலை பயன்பாட்டிற்கு இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படுகிறது.

முன்னதாக மாதம் இருமுறை சர்வதேச நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் மாற்றம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News