செய்திகள்

4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்: மத்திய நீர்வளத்துறை செயலாளர் பேட்டி

Published On 2016-09-30 02:52 GMT   |   Update On 2016-09-30 06:53 GMT
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி 4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் தெரிவித்தார்.
புதுடெல்லி:

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகளின் கூட்டத்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து நேற்று டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி தலைமையில் இரு மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்ட சமரச கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டம் முடிந்த பிறகு மத்திய நீர்வளத்துறை செயலாளர் சஷி சேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 27-ந் தேதியன்று காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது அப்போது மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

அதன் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகளை ஏற்கனவே தொடங்கி இருக்கிறோம். கோர்ட்டு உத்தரவின்படி 4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News