செய்திகள்

ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published On 2016-09-28 09:38 GMT   |   Update On 2016-09-28 09:38 GMT
ரெயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போன்ஸ் தொகையாக வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
புதுடெல்லி:

ரெயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2015-16 ஆம் ஆண்டிற்கு போனஸ் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே துறையில் குரூப் சி, டி பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் தொகையாக வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இதனை தெரிவித்தார்.

இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள 12 லட்சத்து 58 ஆயிரம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம், ரெயில்வேக்கு ரூ.2 ஆயிரம் கோடி கூடுதல் செலவினம் ஆகும்.

கடந்த ஆண்டு, ரெயில்வே ஊழியர்களுக்கு குறைந்தபட்ச போனஸ் தொகையாக ரூ.8,975 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News