செய்திகள்

பாகிஸ்தான் நாட்டு சுற்றுலா பயணிகளை இந்தியா வரவேற்கிறது: மத்திய மந்திரி மகேஷ் சர்மா

Published On 2016-09-27 14:31 GMT   |   Update On 2016-09-27 14:31 GMT
பாகிஸ்தான் நாட்டில் இருந்து சுற்றுலா பயணிகளை இந்தியா வரவேற்பதாக மத்திய மந்திரி மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

உரி பயங்கரவாத தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டில் இருந்து சுற்றுலா பயணிகளை இந்தியா வரவேற்பதாக மத்திய கலாச்சாரத்துறை மந்திரி மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது இதனை அவர் தெரிவித்தார்.

மேலும் மகேஷ் சர்மா பேசியதாவது:-

இந்தியா ஒரு மாறுபட்ட நாடு. உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகளை நாங்கள் வரவேற்கிறோம்.

அதிக அளவிலான அயல்நாட்டினர் இங்குள்ள பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு வருவதன் மூலம் பெருமைமிகு இந்தியா என்பதை நம் நாடு தன்னகத்தே நிரூபித்துள்ளது.

இந்தியா வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் தூய்மையான மற்றும் பாதுகாப்பான சுற்றுலா அனுபவம் அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Similar News