செய்திகள்

வகுப்பிற்கு வராததைக் கண்டித்த ஆசிரியரை குத்திக் கொன்ற மாணவர்கள்: டெல்லியில் பயங்கரம்

Published On 2016-09-27 07:38 GMT   |   Update On 2016-09-27 07:38 GMT
வகுப்பிற்கு சரிவர வராததைக் கண்டித்த ஆசிரியரை மாணவர்கள் குத்திக் கொன்ற சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புது டெல்லி:

டெல்லி நங்கலா பகுதியை சேர்ந்த அரசு பள்ளி இந்தி ஆசிரியர் முகேஷ்குமாருக்கும், 12-ம் வகுப்பு மாணவர்கள் இருவருக்குமிடையே வகுப்பறையில் வைத்து நேற்று பலத்த வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதத்தின் இறுதியில் மாணவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் முகேஷ்குமாரை மூன்று முறை குத்தினர்.

இதில் ஆசிரியர் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். உடனடியாக முகேஷ் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணையில் வகுப்பிற்கு சரிவர வராததை ஆசிரியர் முகேஷ் கண்டித்ததால் மாணவர்கள் அவரைக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முகேஷ் கொலையைக் கண்டித்து நங்கலா அரசுப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் முகேஷ் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என டெல்லி துணை முதல்வர் சிசோடியா அறிவித்துள்ளார்.

Similar News