செய்திகள்

உரி தாக்குதலுக்கு பதிலடி?: பிரதமர் வீட்டில் முப்படை தளபதிகள் அவசர ஆலோசனை

Published On 2016-09-24 08:28 GMT   |   Update On 2016-09-24 08:31 GMT
பாகிஸ்தான் தீவிரவாதிகளால் அரங்கேற்றப்பட்ட உரி தாக்குதல் சம்பவம் இந்திய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாட்டின் முப்படைகளை சேர்ந்த தளபதிகள் மற்றும் ராணுவ உயரதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:

பிரதமரின் அதிகாரபூர்வ அரசு இல்லமான 7 லோகமான்ய திலக் சாலை வீட்டில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்திய ராணுவ தலைமை தளபதி தல்பிர் சிங் சுஹாக், விமானப்படை தளபதி அருப் ராஹா, கப்பற்படை துணை தளபதி சினில் லான்பா ஆகியோர் பங்கேற்றனர். உரி தாக்குதலுக்கு பின்னர் தனது அலுவலகத்தில் ராணுவ தளபதி தல்பிர் சிங் சுஹாக்-ஐ பிரதமர் மோடி சிலமுறை சந்தித்துள்ளார்.

ஆனால், தனது இல்லத்தில் முப்படை தளபதிகளுடன் இன்று பிரதமர் நடத்தியுள்ள அவசர ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Similar News