செய்திகள்

உரி செக்டாரில் ஊடுருவிய 10 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்

Published On 2016-09-20 11:26 GMT   |   Update On 2016-09-20 11:36 GMT
உரி செக்டரில் இன்று ஊடுருவிய 10 தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி செக்டாரில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது நேற்று முன்தினம் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினார்கள். இதில் 18 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதன்பின் தீவிரவாதிகளுடன் ராணுவ வீரர்கள் பயங்கர துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதில் நான்கு தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இதையொட்டி காஷ்மீரில் உள்ள ராணுவ முகாம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் இன்று உரி செக்டார் லச்சிபூரா பகுதியில் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் நடமாடுவதாக பாதுகாப்புப்படை வீரர்களுக்கு தகவல் வந்தது. இதனையொட்டி அவர்கள் அந்த இடத்தை சுற்றி முற்றுகையிட்டனர். உடனே பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அவர்களுக்கு இந்திய ராணுவ அதிகாரிகளும் பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் 10 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

Similar News