செய்திகள்

அணிசேரா நாடுகள் கூட்டமைப்பு உச்சி மாநாட்டை முடித்து கொண்டு தாயகம் திரும்பினார் துணை ஜனாதிபதி

Published On 2016-09-20 00:51 GMT   |   Update On 2016-09-20 00:51 GMT
வெனிசுலாவில் நடைபெற்ற அணிசேரா நாடுகள் கூட்டமைப்பு உச்சி மாநாட்டை முடித்து கொண்டு துணை ஜனாதிபதி அமீது அன்சாரி தாயகம் திரும்பினார்.
புதுடெல்லி:

வெனிசுலா நாட்டின் கராகஸ் நகரில் அணிசேரா நாடுகளின் தலைவர்களின் 17ஆவது உச்சிமாநாடு, செப்டம்பர் 17, 18ஆம் நாள்களில், நடைபெற்றது.

இந்த மாநாட்டில் வழக்கமாக பிரதமர்கள் தான் கலந்து கொள்வது வழக்கம். மோடி இந்த மாநாட்டை புறக்கணித்தால் சிறிய சர்ச்சை ஏற்பட்டது.

இருப்பினும் துணை ஜனாதிபதி அமீது அன்சாரி தலைமையிலான குழு இந்த மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டில் தீவிரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பாக அன்சாரி பேசினார்.

இந்நிலையில், இரண்டு நாள் மாநாட்டை முடித்துக் கொண்டு அமீது அன்சாரி நேற்று தாயகம் திரும்பினார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அணி சேரா நாடுகள் கூட்டமைப்பை உருவாக்க நாடு என்பதில் இந்தியாவிற்கு திருப்தி உள்ளது.

மேலும், தீவிரவாதத்தை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. உரி தீவிரவாத தாக்குதல் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாததது என்றார்.

Similar News