செய்திகள்

நிபந்தனை நன்கொடையை நிராகரித்த பிரதமர் அலுவலகம்

Published On 2016-08-16 10:57 GMT   |   Update On 2016-08-16 10:57 GMT
நாட்டின் ஏழை மனிதருக்குக் கொடுக்கும்படி நிபந்தனையுடன் அளிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் நன்கொடையை பிரதமர் அலுவலகம் நிராகரித்து திருப்பி அனுப்பியுள்ளது.
புதுடெல்லி:

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தீப் சந்திர சர்மா என்பவர் கடந்தாண்டு ஜூன் 10-ம் தேதி ரூ. 1 லட்சம் நன்கொடையை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்து, 'இந்த நன்கொடையை நாட்டின் மிக ஏழையான மனிதரிடம் சேர்த்து விடுங்கள்' என்று தெரிவித்தார்.

பணத்தை அனுப்பி வைத்த தீப் சந்திர சர்மாவுக்கு சமீபத்தில் அந்த பணம் யாருக்கு அளிக்கப்பட்டது? என்று தெரிந்து கொள்ள ஆவல் எழுந்தது.

இதைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தான் அளித்த நன்கொடை யாரிடம் வழங்கப்பட்டது என்ற விவரங்களை பிரதமர் அலுவலகம் அளிக்க வேண்டும் என மனு மூலமாக சர்மா கேட்டிருந்தார்.

இதற்கு பிரதமர் அலுவலகம் அளித்த பதிலில் 'மனுதாரர் நிபந்தனையுடன் அளித்த நன்கொடை 2016ம் ஆண்டு மார்ச் மாதம்  18ம் தேதி திருப்பி அனுப்பப்பட்டு விட்டது. நிபந்தனையுடன் வரும் நன்கொடைகளை பிரதமர் அலுவலகம் ஏற்பதில்லை' என பதிலளிக்கப்பட்டது.

 

Similar News