செய்திகள்

அரியானாவில் கொலை, கொள்ளைகளை குறைத்து சாதனை படைத்த இளம்பெண்

Published On 2016-08-09 07:22 GMT   |   Update On 2016-08-09 07:22 GMT
அரியனா மாநிலத்தில் கிராமத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஒரு இளம்பெண் மின்சாரமே இல்லாத கிராமத்தில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி, குற்றச் சம்பவங்களை வெகுவாக குறைத்ததால் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறார்.
சண்டிகர்:

அரியனா மாநிலம், பரிதாபாத் மாவட்டம், சந்தவலி கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அஞ்சு யாதவ்(22) அப்பகுதியில் மின்சாரம் இல்லாத போதும் பாதுக்காப்புகாக சிசிடிவி கேமராவை பொருத்தி வரலாறு படைத்து உள்ளார்.

சந்தவலி கிராமத்தில் கிடைக்கும் சூரிய ஒளியை பயன்படுத்தி இயங்கும் 72 சி.சி.டி.வி. கேமராவை மக்களின் பாதுகாப்புகாக இவர் பொருத்தியுள்ளார்.

சந்தவலி கிராமத்தில் தொழிற்சாலைகள் பெருக தொடங்கியதும் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலை தேடி வந்தவர்கள் அங்கு குடியேற தொடங்கியுள்ளனர்.

ஏற்கனவே, சுமார் 8 ஆயிரம் மக்கள் வாழ்ந்துவரும் இந்த கிராமத்தில் உள்ள பெண்களின் பாதுகாப்பு கருதி சி.சி.டி.வி. கேமராக்களை இவர் பொருத்த ஆரம்பித்தார்.

மேலும், அஞ்சு யாதவை முன்மாதிரியாக கொண்டு பக்கத்து கிராமத்து மக்களும் தற்போது இதுபோன்ற கேமராக்களை பொருத்த தொடங்க்யுள்ளனர். இதனால் சட்ட விரோதமாக நடைபெற்ற கொலை, கொள்ளை மற்றும் குற்ற செயல்கள் குறைந்துள்ளதாக கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

Similar News