உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறிமோசடி

Published On 2023-02-01 09:26 GMT   |   Update On 2023-02-01 09:26 GMT
  • கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ேமாசடி
  • மொத்த 5 பேரிடம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மோசடி செய்தார்.

கோவை

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கெம்ம நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் அருள்குமார். இவர் தான் கலெக்டர் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருவதாக கூறினார். போலியாக அடையாள அட்டை தயார் செய்து வைத்து இருந்தார்.

மேலும் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அைனத்து அதிகாரிகளையும் தனக்கு தெரியும் என்று கூறி உள்ளார். யாருக்காவது வேலை மற்றும் இடம் வேண்டும் என்றால் பெற்று தருவதாக கூறினார். இதனை உண்மை என நம்பிய அன்னூரை சேர்ந்த இலக்கியா என்பவரிடம் கலெக்டர் அலுவலகத்தில் ரெக்கார்டு கிளர்க் ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் பணத்தை பெற்று ஏமாற்றி உள்ளார்.

இதே போல புறம்போக்கு நிலத்துக்கு பட்டா வாங்கி தருவதாக கூறி சீனிவாசன் என்பவரிடம ரூ.25 ஆயிரம், இலவச இடம் வாங்கி தருவதாக கூறி வேலம்மாள் என்பவரிடம் ரூ.25 ஆயிரம், ேஜாதி என்பவரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.25 ஆயிரம், கல்பனா என்பவரிடம ரூ.25 ஆயிரம் என மொத்த 5 பேரிடம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் பெற்று மோசடி செய்தார்.

பணம் கொடுத்து ஏமாத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்ட போது அருள்குமார் கொடுக்க மறுத்து விட்டார்.

இதனால் பாதிக்கப்பட்ட 5 பேரும் அன்னூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.   

Tags:    

Similar News