உள்ளூர் செய்திகள்

வைகை அணை (கோப்பு படம்)

கூடுதல் தண்ணீர் திறப்பால் வைகை அணையின் நீர்மட்டம் மேலும் உயர்வு

Published On 2023-01-17 05:24 GMT   |   Update On 2023-01-17 05:24 GMT
  • 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் 52.23 அடியாக உள்ளது.
  • 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் 52.23 அடியாக உள்ளது. அணைக்கு 1593 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 969 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2297 மி.கன அடியாக உள்ளது.

முல்லைப்பெரியாறு அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 134.25 அடியாக குறைந்து ள்ளது.

இன்று காலை 1733 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு 137 கன அடி நீர் வருகிறது. இருப்பு 5691 மி.கன அடியாக உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51.95 அடியாக உள்ளது. 36 கன அடி நீர் வருகிறது. 80 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 375.04 மி.கன அடியாக உள்ளது.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 114.80 அடியாக உள்ளது. 10 கன அடி நீர் வருகிறது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 81.48 மி.கன அடியாக உள்ளது. மழை எங்கும் இல்லை.

Tags:    

Similar News