உள்ளூர் செய்திகள்

ஆய்வுக் கூட்டத்தில் விஜய் வசந்த் பங்கேற்பு

Update: 2022-06-29 12:15 GMT
மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.

கன்னியாகுமரி:

தமிழக சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு, குமரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளது. கு.செல்வப்பெருந்தகை தலைமையிலான பொதுக் கணக்கு குழு உறுப்பினர்கள், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் விவேகானந்தர் பாறை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தையும் பார்வையிட்டனர்.

பொது கணக்கு குழு வருகையை முன்னிட்டு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தும் கலந்து கொண்டார்.

Tags:    

Similar News