உள்ளூர் செய்திகள்

இலவச மருத்துவ முகாம் நடந்த போது எடுத்த படம்.

வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம்

Published On 2022-08-21 07:59 GMT   |   Update On 2022-08-21 07:59 GMT
  • சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் ஓமலூர் வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
  • கரு கலைப்பு இளம் வயது கர்ப்பத்தை தவிர்த்தல் ஆகியவற்றைப் பற்றி விழிப்புணர்வை வழங்கினார்.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியம் கோட்டை மேட்டுப்பட்டி ஊராட்சி சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் ஓமலூர் வட்டார மருத்துவ அலுவலர் அருண்குமார் தலைமையில் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட கவுன்சிலர் அழகிரி, ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழி தனசேகரன், ஊராட்சி துணைத் தலைவர் மகாலட்சுமி பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கணேசன் கலந்துகொண்டு சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில் ஆண்கள், பெண்கள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள், ஸ்கேன், இ.சி.சி. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மருத்துவம், கண் பரிசோதனை மருத்துவம் தோல் மருத்துவம் பல் மருத்துவம் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவம் இதய நோய் காச நோய் தொழுநோய் சிகிச்சை சித்த மருத்துவம் யுனானி மருத்துவம் பிசியோதெரபி மருத்துவம் ஆகிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

இந்த மருத்துவ முகாமில் மாவட்ட விரிவாக்க கல்வியாளர் தனக்குமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தற்கால மற்றும் நிரந்தர குடும்ப நல முறையில் பற்றியும் உயர் பிறப்பு வரிசை குறைத்தல் பாதுகாப்பான கரு கலைப்பு இளம் வயது கர்ப்பத்தை தவிர்த்தல் ஆகியவற்றைப் பற்றி விழிப்புணர்வை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து இங்கு நீரிழி நோய் உள்ள முதியவர்களுக்கு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன இதில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதில் இறுதியாக வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் சந்திரசேகரன் நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News