உள்ளூர் செய்திகள்

கடலூர் மாநகராட்சியில் மேயர் சுந்தரி ராஜா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். அருகில் துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் நவேந்திரன், மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா உள்ளனர்.

கடலூர் மாநகராட்சியில் 150 இடங்களில் தடுப்பூசி முகாம் : மேயர் சுந்தரி ராஜா தொடங்கி வைத்தார்

Published On 2022-07-10 09:48 GMT   |   Update On 2022-07-10 09:48 GMT
  • கடலூர் மாநகராட்சியில் 150 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் மேயர் சுந்தரி ராஜா அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
  • கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடலூர்:

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடலூர் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன், செயற்பொறியாளர், புண்ணியமூர்த்தி , நகர் நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி முழுவதும் 150 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும் தடுப்பூசி போடாத நபர்களை கண்டறிந்து தடுப்பூசி போடுவதற்கு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி வீடுகள் தோறும் நேரில் சென்று தடுப்பூசி போடும் பணியிலும் பணியாளர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News