உள்ளூர் செய்திகள்

திருச்சி ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் அ.ம.மு.க. பிரமுகர் போலீசில் இன்று சரண்

Published On 2022-08-10 09:26 GMT   |   Update On 2022-08-10 09:26 GMT
  • சரண்ராஜ் ரியல் எஸ்டேட் அதிபரான இவர் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். இவர் கொலை செய்யப்பட்டார்.
  • இந்த நிலையில் அ.ம.மு.க. நிர்வாகியான சாமிநாதன் தனிப்படை போலீசாரிடம் இன்று சரண் அடைந்தார்.

திருச்சி :

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாலாஜி நகர் 2-வது குறுக்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 35). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை உறையூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார்.

அப்போது பழைய நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சரண்ராஜ் சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த படுகொலை சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவம் குறித்த தகவலறிந்த உறையூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், காந்தி மார்க்கெட் உதவி போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தி ஆகிய உயர் அதிகாரிகளும் விசாரணை செய்தனர்.

இந்தக் கொலையில் உறையூர் பகுதியை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநகர பகுதி நிர்வாகிகள் சாமிநாதன், திருஞானம் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட 4 பேருக்கு தொடர்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. தலைமறைவாகியிருந்த அவர்களைப் பிடிக்க உதவி போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அ.ம.மு.க. நிர்வாகியான சாமிநாதன் தனிப்படை போலீசாரிடம் இன்று சரண் அடைந்தார். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் கொலைக்கான உண்மை காரணம் தெரியவரும். தொழில் போட்டி காரணமா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதம் உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

னும் முன் விரோதம் உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News