உள்ளூர் செய்திகள்

மணப்பாக்கம் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

Published On 2023-04-20 07:12 GMT   |   Update On 2023-04-20 07:12 GMT
  • மணப்பாக்கம் பிரதான சாலையில் சென்னை கழிவுநீர் வடிகால் வாரியம் மணப்பாக்கம், கிருகம்பாக்கம் பகுதிகளில் கழிவுநீர் அகற்றும் பணி நடைபெறுகிறது.
  • மணப்பாக்கம் பிரதான சாலை கிருஷ்ணா கட்டிட சந்திப்பில் இருந்து சாய்பாபா ஆலயம் வரை சுமார் 285 மீட்டர் கழிவுநீர் அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

சென்னை:

சென்னை பெருநகர போக்குவரத்து தெற்கு மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மவுண்ட் போக்குவரத்து உட்கோட்டத்தில் மவுண்ட் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மணப்பாக்கம் பிரதான சாலையில் சென்னை கழிவுநீர் வடிகால் வாரியம் மணப்பாக்கம், கிருகம்பாக்கம் பகுதிகளில் கழிவுநீர் அகற்றும் பணி நடைபெறுகிறது.

இதனால் மணப்பாக்கம் பிரதான சாலை கிருஷ்ணா கட்டிட சந்திப்பில் இருந்து சாய்பாபா ஆலயம் வரை சுமார் 285 மீட்டர் கழிவுநீர் அகற்றும் பணி மேற்கொள்ளப்படுவதால் வாகன போக்குவரத்தை மாற்று பாதையில் செல்லும்படி சோதனை அடிப்படையில் இன்று முதல் 15-ந் தேதி வரை கீழ்கண்ட சாலைகளில் திருப்பிவிடப்படுகிறது.

அதன்படி குன்றத்தூர், முகலிவாக்கத்தில் இருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலை வழியாக கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் ஆவடி காவல் ஆணையரகம் முகலிவாக்கம் பிரதான சாலை இடது புறம் திரும்பி குமுதம் பிரதான சாலை, சபரி நகர், முகலிவாக்கம் பிரதான சாலை வழியாக மவுண்ட் பூந்தமல்லி சாலையில் வந்து சென்றடையலாம்.

பம்மல், கிருகம்பாக்கதில் இருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலை வழியாக கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் மணப்பாக்கம் பிரதான சாலை, கிருஷ்ணா கட்டிட சந்திப்பு, இடது புறம் திரும்பி முகலிவாக்கம் பிரதான சாலை ஆவடி காவல் ஆணையரகம் வலது புறம் திரும்பி குமுதம் பிரதான சாலை, சபரி நகர், முகலிவாக்கம் பிரதான சாலை வழியாக மவுண்ட் பூந்தமல்லி சாலையில் வந்து சென்றடையலாம்.

கிண்டியில் இருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலை வழியாக குன்றத்தூர், முகலிவாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள் நந்தம்பாக்கம் பாலம் சந்திப்பு இடது புறம் திரும்பி நதி காட்சி சாலையில் சாய்பாபா ஆலய வலது புறம் திரும்பி மணப்பாக்கம் பிரதான சாலை வழியாக ராமாபுரம் இடது புறம் திரும்பி பின்னர் ஆவடி காவல் ஆணையரகம் முகலிவாக்கம் பிரதான சாலை இடது புறம் திரும்பி குமுதம் பிரதான சாலை, சபரி நகர், முகலிவாக்கம் பிரதான சாலை வழியாக மவுண்ட் பூந்தமல்லி சாலையில் வந்து சென்றடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News