உள்ளூர் செய்திகள்

தடைசெய்யப்பட்ட வனப்பகுதிக்குள் புகுந்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் குவிந்தனர் ஆபத்தை உணராமல் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் செல்லும் சுற்றுலா பயணிகள்

Published On 2022-09-11 05:09 GMT   |   Update On 2022-09-11 05:09 GMT
  • கொடைக்கானலில் தொடர் விடுமுறையால் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்தனர்.
  • கொடைக்கானலுக்கு வந்த சில சுற்றுலாப்பயணி கள் அத்துமீறி தடை செய்யப்பட்ட அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்று புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தொடர் விடுமுறையால் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்தனர். குறிப்பாக ஓணம் பண்டிகையை கொண்டாட கொடைக்கானலில் கேரளா சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

இதனால் முக்கிய சுற்றுலா பகுதிகளான மோயர் சதுக்கம், குணா குகை, தூண்பாறை, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இயற்கை அழகை கண்டு ரசித்தபடி செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர்.

சுற்றுலாப்பணிகளின் வருகையால் முக்கிய பிரதான சாலைகளாக இருக்கும் அப்சர்வேட்டரி சாலை, ஏரிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து சென்றன.

கொடைக்கானலுக்கு வந்த சில சுற்றுலாப்பயணி கள் அத்துமீறி தடை செய்யப்பட்ட அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்று புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

வனத்துறை யினரின் எச்சரிக்கையை மீறி செல்வதால் வன விலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே அத்துமீறி வனப்பகுதிக்குள் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News