உள்ளூர் செய்திகள்

கஞ்சா கடத்தலை தடுக்க சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம் -தருமபுரி போலீசார் அதிரடி

Published On 2022-08-06 08:27 GMT   |   Update On 2022-08-06 08:27 GMT
  • சட்டப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • கஞ்சா ஒழிப்பு சிறப்பு வேட்டையில் கைது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் கஞ்சா தொடர்பான குற்றங்களை கட்டுப்படுத்தி அதனை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் தொடர் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு, கஞ்சா தொடர்பான குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்று தருமபுரி மாவட்டத்தில் நடத்தப்பட்ட கஞ்சா ஒழிப்பு சிறப்பு வேட்டையில் 18 நபர்களை கைது செய்து, அவர்கள் மீது 17 வழக்குகள் போதை பொருள் தடுப்பு சிறப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கைது செய்யப்பட்ட 18 நபர்களிடமிருந்தும் 5.36 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு உள்ளது. இவர்களில் 14 நபர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பியும், ஒரு நபரை கோட்டாட்சியர் முன்னிலையில் ஆஜர் படுத்தி குற்ற விசாரணை முறை சட்டப் பிரிவு 110 ஆகியவற்றின் கீழ் பிரமானப் பத்திரம் தாக்கல் செய்து,

ஒரு வருடகாலத்திற்கு அவரது நன்னடத்தையை கண்காணித்து வருவதுடன், மீதமுள்ள 3 நபர்கள் மீதும்அதேபோல் குற்ற விசாரணை நடைமுறை சட்டப் பிரிவுகள் 107 மற்றும் 110 ஆகியவற்றின் கீழ் கோட்டாட்சியர் முன்னிலை யில் ஆஜர்படுத்தி அவர்களது நன்னடத்தையும் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் உலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கஞ்சா வேட்டை தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

மேலும் மாவட்ட எல்லைகளில் கஞ்சா கடத்தி வராமல் தடுக்க சோதனை சாவடிகளில் கண்காணிப்பை அதிகரிக் கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News